வெள்ளி, 13 நவம்பர், 2020

சிமெண்ட் பற்றி அறிந்துகொள்ளுங்கள்- Know the Cement

 சிமெண்ட் பற்றி அறிந்துகொள்ளுங்கள்- Know the Cement
 

             1824-இல் ஜோசப் அஸ்பிடின் என்ற கட்டடத் தொழிலாளி முதன்முதலில் சிமெண்ட்   என்பதைக் கண்டறிந்தார்.

            போர்ட்லேண்ட நாட்டிலுள்ள சுண்ணாம்புக் கல்லினைப் போன்றே அந்த சிமெண்ட் இருந்ததால் அதனை போர்ட்லேண்ட் சிமெண்ட் என்று பொதுவாக அழைத்தனர்.

        சிமெண்ட் என்பது சுண்ணாம்புக்கல், களிமண் மற்றும் ஜிப்சம் ஆகிய மூலப் பொருட்களை ஒரு குறிப்பிட்ட வீதத்தில் கலந்து வெப்பப்படுத்திப் பின்னர் பொடி செய்து தயாரிக்கப்படும் ஒரு வேதிக்கலவையாகும். இது சாம்பல் நிற மாவு  போன்று இருக்கும்.
 


        சிமெண்டுடன் நீரைச் சேர்க்கும்போது அது  சில மணி நேரத்தில் கெட்டித் தன்மை அடைகிறது. மிகுந்து உறுதித்தன்மையுடன் இது இருப்பதால்தான் வீடு, கட்டிடங்கள் ஆகியவற்றைக்கட்ட இதனைப் பயன்படுத்துகிறோம். மேலும் இதன் பயன்பாடுகள் குறித்து கீழே காணலாம்.

 

காரை: 


 

           காரை (கலவை) என்பது சிமெண்ட், மணல் மற்றும் நீர் ஆகியவை கலந்த கலவை ஆகும். வீடுகளில் சுவர்கள் கட்டுவதற்கும், அவற்றின் மேலே புசுவதற்கும் தரைத்தளம் அமைப்பதற்கும் காரை பயன்படுத்தப்படுகிறது.

 

கற்காரை (கான்கிரீட்): 


 

        சிமெண்ட்டுடன் மணல், ஜல்லிக் கற்கள் மற்றும் நீர் சேர்ந்த கலவையே கற்காரை அல்லது கான்கிரீட் என்று அழைக்கப்படுகிறது. இவை காரைப் புச்சுக்களை விட் அதிக உறுதித்தன்மையுடன் இருப்பதால்தான் இதனை கட்டடங்கள், பாலங்கள் அணைகள் முதலானவற்றை கட்டுவதற்கு பயன்படுத்துகின்றோம்.