சனி, 21 ஆகஸ்ட், 2021

தமிழ்ச் சங்கம் என்றால் என்ன?

கற்றறிந்த புலவர்களையும், சான்றோரையும் போற்றிப் பாராட்டுவது பண்டைய தமிழ் அரசர்களின் பணியாக இருந்தது. கற்றறிந்த புலவர்கள் அரசர்களாக குறுநில மன்னர்களாக பொது மக்களாக விளங்கினர். ஆண்டி முதல் அரசன் வரை அவர்களோடு பெண்பாற் புலவர்களும் சிறப்புடன் வாழ்ந்தனர் என்பதை அறிகிறோம். அரசர்கள் அவர்களைப் பெரிதும் போற்றினர் என்பதை சங்கப் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன.

சங்கம் என்ற சொல் தமிழ்ச்சொல் இல்லை என்றும் சங்கம் என்று ஒன்று நடத்தப்படவில்லை என்றும் அறிஞர்கள் கூறுவதற்கு காரணம், தொல்காப்பியத்தில் தமிழ் மொழிக்கு முதலில் ச வராது என்ற நூற்பா வையைக் கொண்டுதான்.

அப்படியாயின் சங்கம் என்ற சொல் இல்லை ஆயினும் அவை கழகம் கூட்டம் என்ற சொற்கள் சங்கம் என்ற பொருளில் வழங்கி இருந்தன என்பதை உணர்கிறோம். தமிழ் சங்கத்திற்கு பலருடைய ஆதரவும் தொடர்பும் இருப்பினும் சங்கத்தை வளர்த்த பெருமை பாண்டியருக்கு உரியது. சங்கத்தை நிறுவியவர்களும் பாண்டியர்களே என்பதும் தெரியவருகிறது. குமரிக்கண்டம் நிலைத்திருந்த காலத்தில் மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியன் அதுவே தலைச்சங்கம் ஆகும். அச்சங்கத்தில் அகத்தியன் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் சிவன், குன்றம் எரித்த முருகன், முரஞ்சியூர் முடிநாகராயர் முதலிய549 பேர் இருந்தனர். 4449 புலவர்கள் தமிழ் ஆய்ந்தனர். காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை எண்பத்தி ஒன்பது பாண்டிய அரசர்கள் காத்தி வந்தனர். பெருபரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் தோன்றின. தலைச் கங்கத்தாருக்கு இலக்கண நூல் அகத்தியம். 

இடைச் சங்கம் கபாடபுரத்தில் தோன்றியது. அகத்தியர் தொல்காப்பியர் திரையன் மாறன் கீரந்தை முதலிய 59 பேர் அச்சங்கத்தில் வீற்றிருந்தனர். 3700 ஆண்டுகள் நிலைத்த இச்சங்கத்தில் 3700 புலவர்கள் தமிழாய்ந்துள்ளனர். பெருங்கலி, குருகு வெண்டாளி, அகத்தியம், தொல்காப்பியம், வியாழமாலை, மாபுராணம், பூதபுராணம், இசை நுணுக்கம் போன்ற நூல்கள் பாடப்பட்டன. வெண்டோர்ச்செழியன் முதல் முடத்திருமாறன் வரை 59 பாண்டியர் ஆதரித்தனர்‌. கடைச்சங்கம் இன்றைய மதுரையில் தோன்றியது சிறுமேதாவியார், நக்கீரனார், மருதனிளநாகனார், நல்லந்துவனார் போன்ற 449 புலவர்கள் பாடல்கள் பாடினர். கடைச்சங்கம் 1850 ஆண்டுகளில் நிலைத்தது. முடத்திருமாறன் முதல் 49 பாண்டியர் சங்கத்தை ஆதரித்தனர் 

முச்சங்கங்கள் இருந்த என்பதற்கு முதன்முதலாக களவியலுரை தவிர பிற சான்றுகள் இல்லை.