புதன், 5 டிசம்பர், 2018

நக்கண்ணையார் - Nakkannaiyar

1. நக்கண்ணையார் ஒரு பெண்பாற்புலவராவார். பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணை எனவும் அறியப்படுகிறார்.

2. உறையூர் வீரை வேண்மான் வெளிமான் வெளியன் தித்தின் என்னும் சோழ மன்னனின் மகன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி ஆவான். ஆவன் தன் தந்தையோடு பகைத்துக் கொண்டு  நாடிழந்து, வறுமையில் புல்லரிசிக்கூழுண்டு வருந்தியிருந்தான். அந்நிலையிலும் ஆமூர் மல்லன் என்பானைப் போரில் வெற்றி கொள்கிறான். ஆவன் வீரத்தைக் கண்ட நக்கண்ணையார் அவ்வரசனைத் தாம் மணந்து கொள்ள விரும்பியதாக அவர் பாடிய புறநானுற்று பாடல்கள் 83, 84, 85, ஆகியவற்றின் மூலம் அறியவருகிறோம். 

3. தமிழ் இலக்கிய வரலாற்றில் பெண்பாற் புலவர்கள் மிகவும் அறிதாகவே காணப்படுகின்றனர். ஏனவெ இது போன்ற அரிதினும் முயன்ற பெண்பாற்புலவர்களை நாம் என்றென்றும் நினைவுகூறக்கடமை பட்டுள்ளோம்.