செவ்வாய், 25 செப்டம்பர், 2018

அ. வரதநஞ்சையப் பிள்ளை Varathananjaya Pillai

1. அ. வரதநஞ்சையப் பிள்ளை.

2.இவர் இளமையிலேயே முறையாய்த் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் பயின்று கவி பாடும் வன்மை பெற்றார். 

3. வடமொழி,தெலுங்கு ஆகிய மொழிகளிலும் கணிதம், ஜோதிடம் போன்ற கலைகளிலும் வல்லவர். 

4. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் "ஆசிரியர்" என்னும் சிறப்புப்பட்டம் பெற்றவர். 

5. கற்றோரால் "புலவரேறு" என்று சிறப்பிக்கப்பட்டவர். 

6. கரந்தைத்தமிழ்ச்சங்கத்தில் "தங்கத்தோடா" பரிசினை பெற்றவர். 

7. தமிழவேள் உமா மகேஸ்வரனார் வேண்டுகோளுக்கிணங்க இவர்"தமிழரசி குறவஞ்சி" என்னும் நூலை இயற்றி, ஞானியாரடிகள் தலைமையில் அரங்கேற்றினார். 

8.இவர் தமிழ்த்தாய்த் திருப்பணி, கருணீக புராணம் போன்ற பல நூல்களையம் இவர் இயற்றியுள்ளார்.