புதன், 20 பிப்ரவரி, 2019

சீறாப்புராணம் - Seerapuranam

1.    இறைவனின் திருத்தூதர் முஹம்மது நபி (அவர்கள் மீது இறைவனின் சாந்தியுண்டாகட்டும்) அவர்களின் சிறந்த வாழ்க்கை வரலாற்றினை விவரிக்கும் இனிய தமிழ் நூல் சீறாப்புராணம் ஆகும்.

2. சீறாப்புறாணத்தை இயற்றியவர் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப்புலவர் ஆவார்.

3.    இவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்.

4. ஷேக் அப்துல் காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின்படி உமறுப்புலவர் சீறாப்புராணத்தை எழுதத் தொடங்கினார்.

5.  நூல் முற்றுபெறும் முன்னரே சீதக்காதி மறைந்தார்.

6. பின்பு அபுல் காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புறாணம் நிறைவு பெற்றது. அதன் காரணமாக உமறுப்பலர் அவர்கள் வள்ளல் அபுல் காசீம் அவர்களை தனது நூலில் பல இடங்களில் நினைவு கூர்ந்து போற்றுவது குறிப்பிடத்தக்கது.

7. உமறுப்புலவர் அவர்கள் முது மொழிமாலை என்ற எண்பது  (80)பாக்களால் ஆகிய நூலையும் தமிழுக்குப் படைத்தளித்துள்ளார்.

8. சீறத் என்னும் அரபுச் சொல் தமிழ்மொழி மரபிற்கேற்ப சீறா என்று வழங்கப்படுகிறது.

9.  சீறா என்றால் வாழ்க்கை என்பது பொருளாகும். புராணம் என்பது வரலாறு. சீறாப்புறாணம் என்பதற்கு நபிகள் நாயக்தின் வாழ்க்கை வரலாறு எனப்படுகிறது.

10. இந்நூல் விலாதத்ததுக்காண்டம், நுபுவத்துக்காண்டம், ஹிஜ்ரத்துக்காண்டம் என்ற மூன்று பெரும் பிரிவுகளையும் 5027 விருத்தப்பாக்களையும் கொண்டுள்ளது.

11. இவை முறையே விலாதத்துக்காண்டத்தில் இறைவனின் திருத்தூதர் முஹம்மது நபி (அவர்கள் மீது இறைவனின் சாந்தியுண்டாகட்டும்) அவர்களின் பிறப்பு, இளமைப்பருவம், திருமண வாழ்க்கை ஆகியவையும் நுபுவத்துக்காண்டத்தில் வானவர் ஜிப்றாயீல் மூலம் திருமறை நபிகள் பெருமானுக்கு அருளப்படதும் அதன்பின் மக்கா நகரத்தில் நடந்தவையும் ஹிஜ்றத்துக்காண்டத்தில் மக்கா நகரை விட்டு நாடுதுறந்து பெருமானார் மதீனா நகருக்கு சென்றதும் தீன் நிலை நிறுத்தற்காக நிகழ்ந்த போர்களும் போராட்டங்களும் பிறவும் வரையப்பட்டுள்ளன. 

12. சீறாப்புராணத்தில் நபிகள் நாயகத்தின் வாழ்வு முற்றிலுமாக பாடி நிறைவு செய்யப்படவில்லை. பனு அஹ்மது மரைக்காயர் என்பவர்தாம் பெருமானாரின் தூய திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தார்கள். அஃது சின்னச் சீறா என்று வழங்கப்படுகிறது.