புதன், 20 பிப்ரவரி, 2019

திருமங்கையாழ்வார் - Thirumangai Aalvar

1. திருமங்கையாழ்வார் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராவார். 

2. இவர் சோழநாட்டில் திருவாலித் திருநகரிக்கு அருகில் உள்ள திருக்குறையலூரில் பிறந்தவர்.

3. இவரது பெற்றோர் ஆலிநாடர், வல்லித்திரு ஆவர்.

4. இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்பர்.

5. திருமாலை வழிபட்டுச் சிறப்படைந்தவர்களை ஆழ்வார்கள் என்பர்.

6. இவர் திருமங்கை மன்னர் எனவும் கலியர், மங்கை வேந்தர் எனவும் அழைக்கப்படுகிறார்.; 

7. இவர் பாடிய பாடல்கள் நாலாயிரத்திவ்வியப்பிரபந்தத்தில் உள்ளன.

8. நாலாயிரத்திவ்வியப்பிரபந்ததமானது வைணவ சமயத்தாரின் தமிழ் வேதமாகப் போற்றப்படுகிறது. 

9. அதனுள் பெரிய திருமொழி, திருக்குநற் தாண்டகம், திருநெடுந் தாண்டகம், திருஎழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்பன இவர் பாடியனவாகும்.