வியாழன், 21 பிப்ரவரி, 2019

செம்மொழி - Semmozhigal

1. உலகில் உள்ள ஆறாயிரம் மொழிகளில் ஆறு மொழிகளே செம்மொழிகளாக கருதப்படுகின்றன.
2. கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய ஆறும் செம்மொழிகளாகும்.
3. செம்மொழிகள் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையும் இலக்கிய வளமும் கொண்டவை.
4. பாலி, அரபி, பாரசீகம் ஆகியவையும் செம்மொழிகளாக கருதப்படுகிறது.
5. செம்மொழித் தகுதி என்பது மொழியியல் அறிஞர்களால் தீர்மானிக்கப்படுகிறது.
6. ஈராயிரம் ஆண்டு தொன்மை, சுய சிந்தனையில் உருவான இலக்கிய வளம், தனித்த பண்பாடு, தனித்தியங்கும் தன்மை, பிற மொழிகளை உருவாக்கிய தாய்த்தன்மை ஆகியமை செம்மொழிக்குறிய முக்கிய தகுதிகளாகும்.
7. இந்திய அரசாங்கம் 2004 ம் ஆண்டு அக்டோபர் 12ம் நாள் தமிழை செம்மொழியாக அறிவித்து அரசானை வெளியிட்டது.
8. தமிழ் உயர்தனிச்செம்மொழி என்ற கருத்தை பரிதிமாற்கலைஞர் 1897ல் அவர் எழுதிய தமிழ் மொழி வரலாறு என்ற நூலில் முதன்முதலாக விளக்கியுள்ளார்.
9.தென்னிந்தியாவில் பேசப்படும் மொழிகள் வடமொழியிலிருந்து தோன்றியவை அல்ல என்று அயர்லாந்து நாட்டைச்சார்ந்த மொழியியல் அறிஞர் கால்டுவெல் 1858ல் அவர் வெளியிட்ட திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் விளக்கியுள்ளார்.