வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

திராவிட மொழிகள் - Dravidan Languages

1.வட மொழியிலிருந்து வேறுபட்ட இலக்கணத் தன்மை கொண்ட பன்னிரண்டு திராவிட மொழிகளை கால்டுவெல் விளக்கியுள்ளார்.

2. ஆறு திருந்திய மொழிகளையும் ஆறு திருந்தா மொழிகளையும் கொண்ட தனிமொழிக்குடும்பமாக திராவிட மொழிக்குடும்பமாக கால்டுவெல் விளக்கியுள்ளார்.

3. இந்தியாவில் இன்று 25%பேர் பேசுகின்ற 34 மொழிகளைக் கொண்ட மொழிக் குடும்பமாக திராவிட 
மொழிக்குடும்பம் விளங்குகிறது.

4. கால்டுவெல் கருத்துப்படி திராவிட மொழிகளிலேயே மிகப் பழமையானதும் வட மொழியின் உதவியின்றி தனித்து இயங்கக்கூடியதுமான ஒரே மொழி தமிழ் தான்.

5. திராவிட மொழிகளில் ஒன்றான "பிராஹுய்" பாக்கிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் பேசப்படுகிறது.

6. தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு ஆகிய ஐந்தும் தென் திராவிட மொழிகள்.

7. தெலுங்கு, கோண்ட், கூ ஆகியவை நடு திராவிட மொழிகள். 

8. தமிழ் என்ற சொல்லே தமிளம்-திரமிளம்- திராவிடம் என்று திரிந்ததாக ராமச்சந்திர தீட்சிதர் குறிப்பிடுகிறார்.