வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

சங்க கால தமிழ்ச்சங்கம் - Classical Tamil Sangam

1.  பாண்டிய மன்னர்கள் தான் "மூன்று"சங்கங்கள் அமைத்து தமிழ் வளர்த்ததாக "இறையனார் கலவியலுரை" என்ற எட்டாம் நூற்றாண்டைச்சார்ந்த நூல் குறிப்பிடுகிறது.

2. மேலும் அந்நூலானது புராணம் இதிகாசம் சார்ந்ததாக உள்ளது. எனவே வரலாற்று ஆசிரியர்கள் அச்செய்தியை முழுமையா ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.

3. கி.மு ஆறாம் நூற்றாண்டில் துவங்கி கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் தமிழ்ச்சங்கம் செயல்பட்டதாக வி.ஆர் ராமச்சந்திர தீட்சிதர் கூறுகிறார்.

4. கிறிஸ்துவுக்குப் பின் முதல் மூன்று நூற்றாண்டுகள் சங்கம் இருந்ததாக கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார். அதாவது கடைச்சங்க காலத்தையே அவர் சங்க காலமாக ஏற்கிறார்.

5. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை ஆறு நூன்றாண்டு காலம் சங்கம் செயல்பட்டதாக வரலாற்றுப் பேராசிரியர் என். சுப்பிரமணியம் குறிப்பிடும் கருத்தே இன்று பரவலாக ஏற்கப்படுகிறது.