வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

மலையாளக்கவிஞர். வள்ளத்தோள் நாராயண மேனன் Vallathool Narayana Menon


1. வள்ளத்தோள் நாராண மேனன் (1878-1958) மலையாள மொழியில் ஏறத்தாழ எழுபது நூல்களை இயற்றியுள்ளளர். 

2. இவர் கவிதைகள் "சாகித்திய மஞ்சரி" என்ற தலைப்பில் தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளன. முலையாளக் கவிதை உலகில் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த கவிஞர்களுள் வள்ளத்தோள் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

3. இவர் கேரளக் கதக்களியைப் பரப்ப உழைத்ததோடு, உலகப் புகழ் பெற்ற "கேரளக் கலா மண்டலம்" என்னும் கலைச்சங்கத்தையும் நிறுவினார். 

4. கவிஞர் துறைவன் "வள்ளத்தோள் பாடல்களைத் "தமிழாக்கம் செய்து வெளியிட்டார்.

5. இவர் இயற்பெயர் கந்தசாமி. சிறந்த எழுத்தாளர், நாடக ஆசிரியர், கவிஞர். அனைத்திந்திய வானொலியின் சென்னை நிலைய இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.