புதன், 20 பிப்ரவரி, 2019

சீவக சிந்தாமணி - Seevagasinthamani

1. தமிழ் மொழியில் உள்ள இலக்கிய நூல்களுள் ஐம் பெருங்காப்பியங்களும் ஒன்று. அத்தகைய ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சீவக சிந்தாமணி ஆகும். 


2. சிந்தாமணி என்பதற்கு ஒளிகுன்றாத மணி என்பது பொருள். குன்றாத அழகிய தமிழ்நடை பெற்றிருப்பதாலும், தமிழ் மக்கள் தங்கள் நெஞ்சத்துள் வைத்து போற்றுவர். 

3. தமிழன்னைக்கு அணி சேர்க்கும் விதத்தில் இக்காப்பியத்தை இயற்றித் தந்தவர் திருத்தக்கதேவர் என்னும் புலவர் பெருமகனாவார். 

4. இவர் சோழ நாட்டைச் சார்ந்தவர். மேலும் சமண சமயத்துறவியும் ஆவார். இவர் நரிவிருத்தம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

5. சீவக சிந்தாமணிக்கு மணநூல் என்ற பெயரும் உண்டு. 

6. இதில் நாமகள் இலம்பகம் முதலாக முத்தியிலம்பகம் ஈறாக பதின்மூன்று இலம்பகங்கள் உள்ளன. 

7. விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க் காப்பியம் சிந்தாமணியே ஆகும். 

8. இந்நூலுக்கு உச்சி மேற்கொண்ட புலவர்கொள் நச்சிநார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.

9. சீவகன் பிறந்த பொழுது அவன்தாய் விசயை "சிந்தாமணியே" என்றழைத்ததார். அவனது வரலாற்றை கூறுவதாதலின் இஃது சீவகசிந்தாமணி என பெயர்பெற்றது.