திங்கள், 17 டிசம்பர், 2018

ஒரெழுத்து ஒரு மொழி - Oreluthu oru mozhi

உயிர் ம வில் ஆறும் த ப ந வில் ஐந்தும்
க வ ச வில் நாலும் ய வில் ஒன்றும் ஆகும் நெடில்
நொ து ஆங்குறில் இரண்டொடு
ஒரெழுத்து இயல்பதம் ஆறேழ் சிறப்பின.
(நன்னூல் சூத்திரம் 129)

உயிர் இனத்தில் 6
ஆ -. பசு
ஈ.   -. பறக்கும் பூச்சி. கொடு
ஊ. - ஊன். இறைச்சி
ஏ. - அம்பு
ஐ. - அழகு. தலைவன்
ஓ. - ஒழிவு. உயர்வு. கழிவு. இரக்கம். மகிழ்ச்சி. வியப்பு. நினைவு. அழைத்தல். கொன்றை. நான்முகன்
ம இனத்தில் 6
மா- பெரிய. குதிரை. மாமரம்
மீ- மேலே. மிகுதி
மூ- மூப்பு
மே-  மேல்
மை- கண் மை
மோ- முகர்தல்