புதன், 5 டிசம்பர், 2018

கம்பர் Kambar

1. கம்பர் புகழ் பெற்ற தமிழ்ப் புலவர்களுள் ஒருவராக புகழப்படுகிறார். 

2. இவர் சோழ நாட்டுத் திருவெழுந்தூரில் பிறந்தவர். 

3. இவர் வாழ்ந்த காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 

4. மேலும் இவர் புகழேந்திப்புலவர், ஒட்டகூத்தர், ஓளவையார் முதலியோர் வாழ்ந்த காலத்தவராகவும் கருதப்படுகிறார்.

5. கம்பரைத் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் என்பவர் ஆதரித்து வந்தார். 

6. கவிச்சக்கரவர்த்தி என போற்றப்படுபவர் கம்பர். கல்வியல் பெரியவன் கம்பன், கம்பர் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தமெனும் ஒண்பாவில் உயர் கம்பன், என்னும் சிறப்புத்தொடர்கள் கம்பர் தம் பெருமையை  விளக்குவனவாகும்.

7. மேலும் கம்பர், சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்நாதி முதலிய பல்வேறு வகையான நூல்களையும் இயற்றி இப்பூவுலகிற்கு வழங்கியுள்ளார்.