வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

அறிஞர் அண்ணாவின் தத்துவங்கள்


 1. உழைத்து வாழ்பவனே வணங்கத் தக்கவன். வாழ்த்துக்கு உரியவன். அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுவது சமுதாயத்தின் நல்வாழ்வயே புரையோடச் செய்வதாகும்.

2. பலாத்காரம் கூடாது பலாத்காரம் என்றால் ஆயுத பலாத்கார மட்டுமல்ல தத்துவம் மூலம் பலாத்காரம் கூடாது. தேச ஒற்றுமை தேசியம் என்ற ஏதேனும் தத்துவங்களை கருவியாக்கி வளப்படுத்துவது கூடாது.

3. சமத்துவம் சமதர்மம் போன்ற இலட்சியங்களை பேசுவது சுலபம் ஆனால் சாதிப்பது கடினம்.

4. போட்டியும் பொறாமையும் பொய் சிரப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருப்பது கல்வி மட்டுமே.

5. அறிவாலும் ஆற்றலாலும் ஆகாத காரியம் இல்லை அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்.

6. எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள் வலுவை விளக்கட்டும் நீங்கள் தாங்கி தாங்கி வலுவை பெற்றுக் கொள்ளுங்கள்.

7. வைரம் ஜொலிக்க வேண்டுமானால் சானை பிடிக்கத்தான் வேண்டும் தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காயத்தால் வேண்டும் ஆம் அதேபோல்தான் நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.

8. ஒழுக்கம் ஒரு பொது நியதி ஆனால் அது இடத்துக்கும் இடம் ஆளுக்கு ஆள் தகுந்தார்போல் மாறுபடுகின்றது.

9. பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்த மனிதனிடம் வாதிடுவது செத்துப் போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.

10. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொண்டால் போதாது தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.

11. நெஞ்சிலே வழுவி இருப்பின் வெற்றி தஞ்சமென்று உறைந்து வந்து நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி.

12. கடமை கண்ணியம் கட்டுப்பாடு தெளிவு துணிவு கனிவு.

13. உங்கள் கருத்துக்கள் மதிக்கப்பட வேண்டும் என்றால் நீங்கள் மற்றவர்கள் கருத்துக்களை மதிக்க வேண்டும்.

13. பிறருக்கு தேவைப்படும் போது நல்லவர்களாக தெரியும் நாம் தான் அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் கெட்டவர்கள் ஆகி விடுகின்றோம்.

14. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.

15. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

16. அழகு ஒரு ஆபத்தான ஆயுதம் அதனால் ஆளப் படுபவர்கள் ஆண்கள் ஆள்பவர்கள் பெண்கள்.