ஆற்றல் பல்வேறு வகைப்படுகின்றன. அவை
1. இயந்திர ஆற்றல்
2.நிலை ஆற்றல்
3.இயக்க ஆற்றல்
4. வேதியாற்றல்
5.மின்னாற்றல்
6.வெப்ப ஆற்றல்
7.சூரிய ஆற்றல் ஆகியவை ஆகும்.
இவ்வகை ஆற்றல்கள் தொடர்பான பொதுவான விதிகளைப் பற்றிப்பார்ப்போம்.
- ஆற்றல்களை ஆக்கவோ அழிக்கவோ இயலாது. ஒருவகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற இயலும். இதனையே ஆற்றல் அழிவின்மை விதி என்கிறார்கள்.
- மேலும் எந்த ஓர் ஆற்றல் மாற்றத்திற்கும் மொத்த ஆற்றலின் அளவு மாறாமல் இருக்கம் என்பதும் ஓர் விதியாகும்.
- உதாரணமாக, நீர் இறைக்கப் பயன்படும் மின்மோட்டார் இயங்கும் போது ஆற்றல் மாற்றம் ஏற்படுகிறது.
- அதாவது, இங்கு மின் மோட்டரை இயக்கச் செலவிடப்படும் மின்னாற்றலானது இயக்க ஆற்றலாகவும், ஒலி ஆற்றலாகவும், வெப்ப ஆற்றலாகவும் மாற்றமடைகிறது.
- மின்னாற்றல் = இயக்க ஆற்றல் + ஒலி ஆற்றல் + வெப்ப ஆற்றல்
- மின்னாற்றல் என்பது மின்மோட்டார் இயங்கும்போது வெளிப்படுவது ஆகும்.
- இயக்க ஆற்றல் என்பது நீரை மேலேற்ற பயன்படும் ஆற்றல் ஆகும்
- ஒலி ஆற்றல் மற்றும் வெப்ப ஆற்றல் என்பது மின்மோட்டாரை இயக்கத் தேவைப்படுவதாகும்.