ஞாயிறு, 14 ஜூன், 2020

பார் கோடுகள் என்றால் என்ன? what is mean by barcode?

பேக் செய்யப்பட்ட பல பொருட்களில் நாம் சதுர வடிவிலும்  செவ்வக வடிவிலும் பார் கோடுகளை பார்த்திருப்போம். அது என்ன என்று பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.    கருப்பு வெள்ளை நிறத்தில் சீரான இடைவெளியில்  இருக்கும்  இவற்றை பார் கோடுகள் என்பார்கள். 

 பொருட்கள் வாங்கும்போது கடைக்காரர்கள் பார் கோடு இருக்கும் பகுதியை ஒரு கருவியின் மீது வைப்பார். உடனே அது இணைக்கப்பட்டுள்ள கணினியின் திரையில் அந்த பொருள் தொடர்பான விபரங்கள் விலை உட்பட பதிவாகும். இந்த பார் கோடுகள் நமக்கு பல விதங்களில் பயன்படுகின்றன.இல்லையென்றால் கடையில் பிரதிநிதி ஒவ்வொரு பொருளின் பெயரையும் கணினியில் டைப் செய்ய வேண்டி இருக்கும் அதற்கு நீண்ட நேரமாகும். அதே நேரம் நாமும் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும் தவிர இந்த தகவல்களை அச்சிடும் போது அந்த பொருள் கடையில் இன்னும் எவ்வளவு ஸ்டாக் உள்ளது என்பதும், கடைக்காரருக்கு தெரிந்துவிடும். 

இந்த பாாா கோடை 1970-ல் அமெரிக்கப் பொறியாளரான ஜார்ஜ் லாரெர் என்பவர் 12 இலக்கம் கொண்ட பார்கொடு முறையை கண்டறிந்தார். பின்னர் 13 கோடுகள் கொண்ட வழி முறை அறிமுகமானது. தற்காலத்தில் பொதுவாக 12 இலக்க பார் கோடுகள் அமெரிக்காவிலும், 13 இலக்கம்    கொண்டவை  இந்தியா உட்பட பிற நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. என்றாலும் பார் கோடு ஸ்கேனர் கருவிகளால் இரு சங்கேத பக்கங்களையும் படித்து புரிந்து கொள்ள முடியும்.

கருப்பான கோடுகள் மற்றும் வெள்ளையான காலியிடங்கள் ஆகியவற்றை ஸ்கேனர் கருவி ஜீரோ கமா ஒன்று (0,1) என்று இனம் பிரிக்கும். ஏனென்றால் கணினி தன்னிடம் வரும் எல்லா செய்திகளையும் ஜீரோ கம்மா (0,1) ஆகிய இரண்டு விபரங்களைத் தான் பிரித்து அறிந்து கொள்ளும். இதை பைனரி சிஸ்டம் என்பார்கள். பார் கோடுகளும் இந்த முறையை தான் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சங்கேத குறியீடு உண்டு‌. கோடுகளின் அதிகாரபூர்வமான பெயர் GTIN என்பதாகும். அதாவது GLOBAL TRADE ITEM NUMBER என்பதன் சுருக்கமே. 
 கருப்பும்  வெளுப்பும் ஆக காட்சியளிக்கும் இந்த பார் கோடுகளில் பல விபரங்கள் உள்ளன. அது எந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள், தயாரிப்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட எண், அது எந்த வகை பொருள், அதற்கான விலை என்ன ? இப்படி பல விபரங்களை கறுப்பு வெள்ளைக் கோடுகளில் உள்ளடங்கியுள்ளன. பார்கோடுகள் உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளதற்கு காரணம் இவை சில தகவல்களை சீராக உலகமெங்கும் கொண்டிருக்கின்றன. மொழிப் பிரச்சினை இல்லை. மொழிக்குறி Font என்பது பற்றி கவலைப்படாமல் இந்த தகவல்கள் எந்த கணினியும் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.