ஞாயிறு, 14 ஜூன், 2020

வின்வெளி செல்லவிருக்கும் முதல் இந்திய பெண் ரோபோ....The first Indian woman robot to enter space ...

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ "வியோம்மித்ரா" என்ற ரோபோவை  அறிமுகம் செய்துள்ளது. இது பார்ப்பதற்கு பெண்ணின் உருவத்தில் காட்சியளிக்கிறது.
இஸ்ரோவின் "ககன்யான்" திட்டத்தில் வியாபித்த ரோபோ முக்கிய பங்கு வகிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி செல்லும் வீரர்களுக்கு உதவியாக இந்த ரோபோ செயலாற்றும். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்து பேசி கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்வெளிக்குச் செல்ல விருக்கும் முதல் இயந்திர பெண்மணி இந்த ரோபோ தான். கால்கள் அற்ற இந்த ரோபோவால் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் அசைய முடியும். அதுமட்டுமல்ல விண்கலங்களில் உள்ளே ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்களைக்கூட சரியாக கணக்கிட்டு தகவல் தரக்கூடிய இந்த ரோபோ புறப்பாடு மற்றும் தரை இறங்கும் போது அதற்கேற்றவாறு அமரக்கூடியது.தனக்கு இடப்படும் ஆணைகளை சரியாக உள்வாங்கி செயலாற்றக்கூடிய இந்த ரோபோ பெங்களூரில் நடைபெற்ற ஆய்வுவரங்கு ஒன்றில் அனைவரையும் கவர்ந்தது. ஆய்வரங்கில் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மனிதர்களை விண்ணில் அனுப்புவதற்கு முன்னோட்டமாக இந்த ரோபோ விண்ணில் ஏவப்படும் என்று தெரிவித்தார். டிசம்பர் 2020 மற்றும் ஜூலை 2021 மாதங்களில் நடக்கவிருக்கும் ஆள் இல்லாத மிஷன்களில் இந்த ரோபோ விண்ணில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.