ஞாயிறு, 7 அக்டோபர், 2018

ஐங்குறுநூறு Ingurunooru

1. ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு

2. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை திணைகளை குறித்த குறுகிய நூறு நூறு பாட்டுகளைத் தொகுத்த நூல் ஆதலின் இப்பெயர் பெற்றது.  

3.மூன்றடி சிறியனவும் ஆறடி பெரியனவும் ஆக ஐநூறு ஆசிரியப்பாக்கள் உள்ளன. ஆகவே, அளவினும், பொருளிலும், இந்நூல் இப்பெயர் பெற்றது.

4. இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாக உள்ளது. இது ஒரு அகப்பொருள் பற்றிய நூலாகும். 

5. அளவில் சிறியதாகவும்  ஆழமான கருத்துக்களை கொண்ட சிறப்பு வாய்ந்த நூலாக அறியப்படுகிறது.

6.  இன்பப் பொருளமைந்த அகப்பொருள்  பாடல்களை திணைக்கு நூறாய் ஐந்நூறு பாடல்களை கொண்ட நூல் ஒன்றை உருவாக்கி தமிழுலகிற்கு வழங்க' யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை' என்னும் சேர மன்னன் விரும்பினான். 

7. தனது விருப்பத்தினை கூடலூர் கிழார் என்னும் புலவரிடம் கூறினான்.  அவர் திணை பாடுதலில் சிறந்த புலவர் பெருமக்களைக் கொண்டு நூறு நூறு பாடல்களை பாடச் செய்து இந்நூலை தொகுத்து வழங்கினார்.