சனி, 6 அக்டோபர், 2018

ஒற்றளபெடை Ottralapedai

1. கலங்ங்கு நெஞ்சமில்லை காண்.

2.  மேற்கண்ட தொடரில் 'கலங்ங்கு' என்னும் சொல்லில் உள்ள மெய் எழுத்து அளபெடுத்துள்ளது. 

3.கலங்கு எனும் இயல்பான சொல்லால் செய்யுளில் ஓசை குறைகிறது.  எனவே இதில் உள்ள மெய்யெழுத்து அளபெடுத்துள்ளது. அதற்கு குறியீடாக மெய் எழுத்து இரு முறை வழங்கப்படுகின்றது. 

4. இவ்வாறு செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய சொல்லினுள் மெய்யெழுத்து அளெ படுத்தலை 'ஒற்றளபெடை' என்பர்.
      
5. மெய்யெழுத்துக்களுள் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்தும் ஆயுத எழுத்தும் அளபெடுக்கும். 

6. ஒற்றளபெடை சொல்லின் இடையிலும் இறுதியிலும் மட்டுமே நிகழும்.
 
7. குறிற் கீழும் குறிலிணைக் கீழும் உள்ள மெய்யெழுத்துக்கள் மட்டுமே அளபெடுக்கும். (எ.கா) கண்ண் கருவினை, விடங்ங் கலந்தானை, இலங்ங்கு வெண்பிறை, எஃஃகிலங்கிய கையர், இல ஃஃகு முத்தின் .