சனி, 6 அக்டோபர், 2018

உயிரளபெடை Ueiralapedai

1. புலவர்கள் தாம் இயற்றும் செய்யுளில் ஓசை குறையும் போது, அவ்விடத்திலுள்ள எழுத்தோடு அதன் இன எழுத்தைச் சேர்த்து, ஒசையை நிறைவு செய்வர். இதற்கு அளபெடை என்பது பெயர் . 

2.  இருக்கும் அளவைக் காட்டிலும் மிகுந்து ஒலிக்கச் செய்வது என்பது இதன் பொருள்.

3.  உயிரெழுத்தைக் கொண்டு ஓசையை நிறைவு செய்தால், அதனை உயிரெள பெடை என்பர்.  

4. மெய் எழுத்தைக் கொண்டு நிறைவு செய்தால் " ஒற்றளபெடை" என்பர்.
       உயிரளபெடை மூன்று வகைப்படும். அவை,
        1) செய்யுளிசை அளபெடை .
         2) இன்னிசை அளபெடை .
        3 ) சொல்லிசை அளபெடை .