சனி, 6 அக்டோபர், 2018

நற்றிணை Nattrinai

1. நற்றிணை  எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப்போற்றப்படும் நூல் இது. 

2. நல்+திணை=நற்றிணை. திணை என்றால் 'ஒழுக்கம்'. அதனை அகவொழுக்கம் புறவொழுக்கம் என இருவகையாக பகுத்துக்க கூறுவர். 

3. அகவொழுக்கமாவது குடும்ப வாழ்வாகிய இன்பத்தை பொருளாய்க் கொண்டது. புறவொழுக்கமாவது அந்த அகவொழுக்கம் சிறந்து விளங்கத்தேவையான அறம், பொருள் முதலானவற்றை கருப்பொருளாய் கொண்டது. 

4. இவற்றை முறையே அகத்திணை, புறத்திணை என்பர். சிறந்த அகவொழுக்கம் பற்றிக் கூறுவதால் இது " நற்றிணை" எனப் பெயர் பெற்றது.


5.  அகத்திணை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்துவகையாக பகுத்துக் கூறப்படும். 

6. இவற்றை "அகன் ஐந்திணை" என்று சிறப்பித்துக் கூறுவர். 

7. இவ்வைந்து திணைகளைப்பற்றிய பாடல்களால் தொகுக்கப்பட்ட நூல்கள் பல உள்ளன. அவற்றுள் நிறந்ததாய் விளங்குவதால் நற்றிணை முதலாவதா புகழப்படுகிறது. 

8. மேலும் எட்டுத்தொகை நூல்களுள் 'திணை' என்ற பெயரால் 'நல்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுவது இந்நூல் மட்டுமே.

9.  இந்நூலில் உள்ள பாடல்கள் யாவும் 'ஆசிரியப்பாக்களால்'ஆனவை. 

10. ஒன்பதடி முதல் பன்னிரண்டுஆன்டிவரையான ஆசிரியப்பாக்கள் இந்நாலில் உள்ளன. ஆகவே இந்நூல் "நற்றிணை நானூறு" எனவும் வழங்கப்பெரும்.  

11. இந்நூலை தொகுத்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான். தொகுத்தவர் யாரென்று அறியப்படவில்லை.


12.   இந்நூலில் உள்ள பாடல்கள் புலவர்கள் பலரால் பாடப்பட்டதாகும். தோராயமாக இருநூற்று எழுபத்தைந்து புலவர்கள் பாடிய பாடல்கள் இந்நூலில் உள்ளன. 

13. இந்நூல் பண்டைகால மக்களின் இன்பியல் வாழ்க்கை நெறிகளை உணர்த்துவதோடு, பண்டைகால பழக்க வழக்கங்கள், நாகரிகம், பண்பாடு, முதலியவற்றையும், விளக்குகிறது. மேலும், பண்டைகால அரசர்களின் ஆட்சி முறை, வீரம், ஈகை, அறம், அன்பு, முதலிய பண்புகளையும், புலப்படுத்தி பண்டைய மக்களின் குறிப்பாக தமிழ் மக்களின் சிறப்பியல்புகளை அறிந்து கொள்ள பெரிதும் துணை செய்கிறது.