ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை Namakkal Kavignar Ramalingam Pillai

1.இராமலிங்கம் பிள்ளை சேலத்தை அடுத்த மோகனூரில் வெங்கட்ராம பிள்ளைக்கும் அம்மணி அம்மையாருக்கும் 19.10.1888 ம் ஆண்டு மகனாகப்பிறந்தார் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள்.

2.நாமக்கலில் வாழ்ந்தமையால் நாமக்கல் கவிஞர் என அழைக்கப்பட்டார்.

3.இந்திய நாட்டு விடுதலைக்கு உழைத்த மாமனிதர்களுள் இவரும் ஒருவர். உப்புச்சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறைவாசம் அனுபவித்தார்.

4." கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என்ற பாடல் உப்புச்சத்தியாகிரகத்தில் வழிநடைப்பாடலாய் அமைந்தது.

5. இவர் காந்தியடிகள் மீது பேரன்பு கொண்டவர். அதனாலேயே இவரை 'காந்தியக்கவிஞர்' என வழங்குவர்.

6.நம் நாடு விடுதலையடைந்தபின் தமிழக அரசின் அரசவைக்கவிஞராகவும் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

7.நடுவண் அரசு இவருக்கு "பத்மபூஷண்"  விருது வழங்கி பெருமைபடுத்தியது.