ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

மனிதநேயம் Manidha Neyam

மனிதநேயம் (Human being)
வானும் மண்ணும் அதிலுள்ளவையும் மனிதனுக்காக இறைவனால் படைக்கப்பட்டுள்ளன . அவற்றில் சில சிலருக்கு எழுத்தளவில் சொந்தமானவையாக உள்ளன. சிலருக்கு தேவைக்கு குறைவாகவும் சிலருக்கு தேவைக்கு அதிகமாகவும் இறைவன் தருகிறார். சிலருக்கு தராமல் கூட  இறைவன் விட்டுவிடுகிறான்.  இவை இந்த உலகம் நன்முறையில் நடைபெற இறைவனால் வகுக்கப்பட்டதாகும். இதுவே எதார்த்தமான இயற்கை நியதியாகும். இதனை புரிந்துகொள்ள தவறும்போது அல்லது இந்த சித்தாந்தத்தை மனிதன் மறக்கும்போது மனிதன் தன் நிலை மறந்து செயல்பட துணிகின்றான். அவனுக்குள் போட்டியும் பொறாமையும் இயல்பாகவே வந்துவிடுகின்றன. இதனால் தான் அவன் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற ஆணவத்திலும் அகங்காரத்திலும் உழல்கிறான்....
செல்வமும் புகழும் அதிகாரமும் அதிகம் கொடுக்கப்பட்டவனோ ஏழைகளையும் இயலாதோரையும் தேவையுடையோரையும்  கவனிக்க மறுக்கிறான்.  இதனால் போராட்டங்கள் வன்முறைகள் கொலை கொள்ளை விபச்சாரம் போன்ற தீமைகள் நடக்கத்தொடங்கிவிட்டன...
     இதுவல்லாது மிக முக்கியமான ஓர் சித்தாந்தம், மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டுள்ளான்? மீண்டும் எவ்வாறு இல்லாமல் போகிறான்? என்பதுதான்.. இதை ஒருவன் சிந்தித்தால் உண்மை விளங்கும். ஆனால் இவற்றையெல்லாம் சிந்திப்பதில்லை. அப்படியே சிந்தித்தாலும் அத்தேடல்களுக்கான உண்மையை உண்மையாக அறிந்துகொள்வதில்லை... இவற்றை எல்லாம் மனிதன் சிந்திக்க ஆரம்பித்தால், மனிதாபிமானம் இயற்கையாகவே மனிதனுக்குள் ஊற்றெடுக்கும். மனிதாபிமானம் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை.