ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

மைக்கல் பாரடே Michael Faraday

1. அறிவியலில் பல புதுமைகள் படைத்த மைக்கேல் பாரடே 22.09.1791 அன்று லன்டனில் உள்ள நியூவிங்டன் பட்ஸ் எனுமிடத்தில் பிறந்தார்.

2.  இவருடைய தந்தை ஜேம்ஸ் பாரடே ஆவார். 

3. சிறு வயதிலிருந்தே வறுமையின் காரணமாக தனது 14வயதிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்தவேண்டியதாயிற்று. 

4. அக்காலத்தில் பிரபலமாக இருந்த வேதியல் விண்ஞானி ஹம்பரி டேவியிடம் தன்னை உதவியாளராக சேர்த்துக்கொண்டார். 

5. உலகின் முதல் மின்சார டைனமோவை கண்டறிந்தார். முதன்முதலில் வாயுக்களை திரவமாக மாற்றிக்காட்டினார். எ

6. ளிய மனிதர்களும் புரிந்து கொள்ளும்படி " மெழுகுவர்தியின் வேதியல் வரலாறு" என்ற புத்தகத்தினை இயற்றினார். 

7. இன்றுவரையில் பாரடே விளைவு தான் மூலக்கூறுகளின் வடிவத்தை விளக்கப் பயன்படுகின்றன. 

8. இதுமட்டுமல்லாது எக்கில் உலோகக் கலவைகளை ஆய்வு செய்தார். மேலும் கண்ணாடிகளையும் ஒளியியல் நோக்கங்களுக்கு உருவாக்கினார்.

9.  இன்றளவும் இவை தொலைநோக்கியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

10. இதுமட்டுமல்ல இன்றளவும் உலகம் முழுவதுமுள்ள ஆய்வுக்கூடங்களில் பொருட்களை சூடாக்க பயன்படும் பஞ்சன் சுடர் இவரது சிந்தனையில் உதயமானது தான். 

11. காப்பிடப்பட்ட தாமிரக்கம்பியின் ஊடே காந்தத்தை நகர்த்தினால் மின்சக்தி ஏற்படும் என்பதை கண்டறிந்து கூறினார். 

12. மின்னேற்புத்திறனின் அலகை இன்றளவும் பாரட் என்ற அளவால் அவரது நினைவாக பயன்படுத்துகிறோம். அவரது இக்கண்டுபிடிப்பு இல்லையேல், இன்று எந்த மின் சாதனமும் இல்லை. 

13. இப்படி அறிவியலுக்கும் மனித குலத்திற்கும் மாபெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய மைக்கேல் பாரடே அவர்கள் 25.08.1867 அன்று தனது 76 வது வயதில் மரணமடைந்தார்.